Saturday, December 17, 2005

நன்றி கெட்ட மாந்தரடா! Ganguly அறிந்த பாடமடா!

இந்திய கிரிக்கெட்டில் அரசியலும், அநியாயச் சார்பும், டால்மியாவின் இரும்புப் பிடியிலிருந்து கிரிக்கெட் வாரியம் விடுபட்டதால், குறைந்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக பலரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், டெஸ்ட் அணியிலிருந்து கங்குலியை நீக்கிய செயல், எதுவும் மாறவில்லை என்பதை நிரூபித்துள்ளது! கங்குலியை விலக்கியதற்கு நாற்றமிகு அரசியலே காரணம் என்று எண்ணுவதற்கு காரணங்கள் உள்ளன! இத்தனைக்கும், தில்லி டெஸ்டில் அவர் அணியின் நலன் கருதி பொறுப்பாகவே விளையாடினார். முதல் இன்னிங்க்ஸில் சச்சினுடனும், இரண்டாவதில் யுவராஜுடனும் கங்குலி கூட்டு சேர்ந்து விளையாடியதில், அணிக்கு முறையே 121 ரன்களும், 81 ரன்களும் கிடைத்தன. அவற்றில், கங்குலி எடுத்தது, 40 மற்றும் 39 ரன்கள். தகுதி அடிப்படையில் அவர் நீக்கப்பட்டார் என்றால், அவரை விட 2 ரன்களே அதிகம் எடுத்த லஷ்மண் மற்றும் 2 டெஸ்டுகளில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே வீழ்த்திய அகர்கரும் என்ன கிழித்தார்கள் ?

கிரன் மோரே என்னும் மடையரின் தலைமையில் உள்ள தேர்வுக்குழு தாங்கள் ஜோக்கர்கள் என்பதை உணர்த்தியுள்ளனர் ! தேர்வுக்குழு தலைவராக நீடிக்க வேண்டும் என்பதற்காக, மோரே எப்படி பச்சோந்தியாக மாறி பவார் தரப்புக்கு ஓடினார் என்பது நாம் அறிந்தது தான்! கங்குலியின் பல செயல்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும், எதற்கு அவரை 'ஆல்ரவுண்டர்' என்று கூறி அணியில் சேர்த்து விட்டுப் பின் நியாயமான காரணமின்றி விலக்க வேண்டும் என்பதே ஆதாரக் கேள்வி. திமிர் பிடித்த மோரே தேர்வுக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், கங்குலி நான்காம் இறக்கத்தில் (4 DOWN) ஆட வருவது தனக்கு விருப்பமில்லை என்கிறார்!!! இவரது தனிப்பட்ட விருப்பத்தை யார் கேட்டார்கள் ? கிட்டத்தட்ட 15000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ள ஒருவரை, கவைக்குதவாத ஐந்து ஜால்ராக்கள் தூக்கி எறிவதைப் பார்க்கும்போது எரிச்சல் மண்டுகிறது !!!

கிரன் மோரையை விடுத்து மீதமுள்ள நான்கு உறுப்பினர்களில் இருவருக்கு கிரிக்கெட் விளையாட்டுடன் ஸ்நானப்பிராப்தி கிடையாது ! மற்றும் பூபிந்தர் சிங் என்பவர் 2 ஒரு நாள் போட்டிகளிலும், VB சந்திரசேகர் 5 ஒரு நாள் பந்தயங்களிலும் விளையாடி இருக்கின்றனர் ! தேர்வுக்குழுவில், எப்பேர்ப்பட்ட கிரிக்கெட் அனுபவம் நிறைந்திருக்கிறது, பாருங்கள் !?! இதில், அடிப்படைப் பிரச்சினை, தேர்வுக்குழு உறுப்பினரின் நேர்மை, கிரிக்கெட் அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை கேள்விக்குறி ஆகி விட்டன.

தேர்வுக்குழு உறுப்பினர் என்பவர், குறைந்த பட்சம் 25 டெஸ்ட்களிலோ, 40 ஒரு நாள் போட்டிகளிலோ விளையாடியவராக இருப்பது ஓர் அவசியமான தகுதியாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுளது. மேலும், தேர்வுக்குழுவை நிறுவதில் வெளிப்படையான ஒரு தேர்வு முறை இருப்பதும், உறுப்பினர்களுக்கு தகுந்த ஊதியமும் வழங்கப்படுவதும் அவசியமாகிறது. நல்ல சன்மானம் இல்லாததால் தான், திறமை மிக்க ரவி சாஸ்திரி, நவ்ஜோத் சித்து, மொகிந்தர் அமர்நாத் போன்றவர்கள் உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை.

கங்குலி விலக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாப்பல், கங்குலி நன்றாக விளையாடுவதாக நம்பிக்கை தெரிவித்து விட்டு, அடுத்த நாள் தேர்வுக்குழு கூட்டத்தில் என்ன கூறினாரோ ? அதனால், கங்குலியின் நீக்கத்தில், அணியை நல்ல முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கும் சாப்பலுக்கும், டிராவிட்டுக்கும் பங்கிருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. டிராவிட் கூறிய, "That is the way International cricket is!" மற்றும் கங்குலிக்கு ஆதரவாகப் பேசியவர்களைக் குறித்துக் கூறிய, "They don't represent the Indian public" போன்றவை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன! கேப்டன் ஆன சில மாதங்களிலேயே இப்படி ஒரு மாற்றமா ? இத்தனைக்கும் இதே டிராவிட் ஒரு நாள் பந்தயங்களுக்கு லாயக்கிலாதவர் என்ற சர்ச்சை எழுந்தபோது, கங்குலி அவருக்கு தோள் கொடுத்தவர் தான் !

லஷ்மிபதி பாலாஜியும், சகீர் கானும் அணியில் இடம் பெறாததற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. சகீர் கானிடம் திறமை இருந்தாலும், Attitude சரியில்லை என்று சொல்லப்படுகிறது. அதை சரி செய்து, அவரது திறமையை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொள்வதும் பயிற்சியாளரின் பணிகளில் ஒன்று இல்லையா ? இல்லையெனில், எதற்கு சாப்பலுக்கு இவ்வளவு தண்டம் அழ வேண்டும் ? பாப் உல்மர், attitude சரியில்லாத ஷோயப் அக்தரை மாற்றி, அவரை சரியான வழியில் நடத்திச் சென்றதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் 2-0 டெஸ்ட் தொடர் வெற்றியில், அக்தர் பிரகாசிக்கவில்லையா ?

சமீபத்திய இந்திய வெற்றிகளுக்குப் பின், இப்போதுள்ள இந்திய அணியை, சாப்பலும் டிராவிட்டும் உருவாக்கியது போல ஒரு மாயை நிலவுகிறது. ஓரளவு அணிக்கு மெருகு கூடியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. போகப் போகத் தான் பார்க்க வேண்டும்! கங்குலி சில தவறுகள் செய்திருக்கிறார். ஆனால், வீரேந்திர சேவாகை துவக்க ஆட்டக்காரராக பரிமளிக்க வைத்தது, யுவராஜையும், ஹர்பஜனையும் பல வாய்ப்புகள் தந்து அணியில் தக்க வைத்துக் கொண்டது, தோனியையும், கை·பையும் ஊக்குவித்தது என்று சில நல்ல விஷயங்களுக்கும் அவர் காரணமாக இருந்துள்ளார். அப்படிப்பட்டவரை, அவர் நீக்கப்பட்டவுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைப்பக்கம் கூட எட்டிப் பார்க்காமல், சக ஆட்டக்காரர்கள் நிராகரித்தது வேதனையான ஒரு விஷயம் ! "நன்றி கெட்ட மாந்தரடா, கங்குலி அறிந்த பாடமடா!" (இப்பதிவின் தலைப்புக்கு காரணம் வேண்டும் அல்லவா !!!) என்று தான் சொல்ல வேண்டும் !

கங்குலிக்கு இப்போது எழுந்துள்ள ஆதரவை வைத்துப் பார்க்கும்போது, கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றால் கூட, மேற்கு வங்க அரசியலில் அவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவே தோன்றுகிறது :-) கங்குலியின் நீக்கம் குறித்து பாராளுமன்றத்தில் கூட விவாதம் நடக்க இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

9 மறுமொழிகள்:

Narain Rajagopalan said...

//கங்குலிக்கு இப்போது எழுந்துள்ள ஆதரவை வைத்துப் பார்க்கும்போது, கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றால் கூட, மேற்கு வங்க அரசியலில் அவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவே தோன்றுகிறது :-) கங்குலியின் நீக்கம் குறித்து பாராளுமன்றத்தில் கூட விவாதம் நடக்க இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது !!!//

: )))))))))))))))))))

enRenRum-anbudan.BALA said...

Narain,
nanRi :)

Raja said...

நன்றி பாலா. கங்குலிக்கு ஒரு வாய்ப்பு நண்பர்கள் யார் , துரோகிகள் யார் என்று அறிவதற்கு

Nambi said...

I have a same feeling.

-Nambi

அன்பு said...

கிரன் மோரே என்னும் மடையரின் தலைமையில் உள்ள தேர்வுக்குழு தாங்கள் ஜோக்கர்கள் என்பதை உணர்த்தியுள்ளனர்

என்ற வரிகளைப்பார்த்தவுடன் ஏன் பால இவ்ளோ டென்ஸனாகுரார்னு நான் டென்ஸன் ஆனேன்:)
ஆனால் முழுப்பதிவும் படித்துமுடிக்க உங்கள் மனநிலைதான் எனக்கும். மிக நல்ல அலசல். பாராட்டும், நன்றியும்.

இந்தப்பதிவையும் 'கிரிக்கெட்' வலைப்பதிவில் இடுங்களேன்.

enRenRum-anbudan.BALA said...

ராஜா ராம்தாஸ், நம்பி,
கருத்துக்களுக்கு நன்றி.

அன்பு,
உங்கள் கருத்துக்களுக்கும், ஆரம்பத்திலிருந்து எனக்கு நீங்கள் வழங்கி வரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. டென்ஷன் ஒன்றும் இல்லை. போராடி சாதித்த ஒருவரை, இப்படி 'use and throw' என்ற வகையில் விலக்கியது கண்டு கொஞ்சம் கோபம் தான்!!! முன்னர், ஸ்ரீகாந்தையும் (பாகிஸ்தான் சென்று நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் டிரா செய்திருந்தும்!) இப்படித் தான் தூக்கி எறிந்தார்கள், யாரும் வாயைத் திறக்கவில்லை.

'கிரிக்கெட்' வலைப்பதிவுக் குழுவில் நான் உறுப்பினர் இல்லை.

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

Actually they should not have selected ganguly for any match. They done a wrong thing. thats y now everybody is giving full support to ganguly.

Unnecessarily kiran more included ganguly in the test team and got bad name now for removing him. One thing I want to tell. Until Like you kind of people's mentality change, team india will not prosper.

This is game. The decision is correct. Otherwise ganguly will dillute the team overall

said...

இத்தோல்வியால் ஒரு நல்லது நடந்தால் மகிழ்ச்சி! கங்குலியை தலைமைப் பதவிலிருந்தும் (அணியிலிருந்தும்) கழற்றி விட்டால் நலம்! நடக்கும் என்று திடமாக நம்புகிறேன்! Anyway, he has just been a passenger in recent times! கைஃப் அல்லது யுவராஜ் இந்திய அணிக்குள் நுழைய வழி பிறக்கும். டிராவிடை கேப்டனாக நியமிப்பதற்கான நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.


--- This is your comment only. Taken from March 2005 blogs. So Kiran more did the good thing.

said...

Ninda Noyana Hadawe

Iraj

WATCH THE VIDEO:

http://www.youtube.com/?v=luIuCOMZ8ug

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails